நினைவேந்தலை தடுத்து, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் கட்சிகள் மீது இராணுவ பலப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் ஏதுநிலை தோன்றுவதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு இடையூறு விளைவித்து பல நெருக்கடிகளை பொலிசார், இராணுவம், விசேட அதிரடிப்படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்ட இடத்தை விட்டு எழுந்து செல்லும்படியும், அங்கு பத்திரிகைகள் வைத்து வாசிக்க முடியாதென்றும் பல்வேறு மிரட்டல், உருட்டல் வேலைகளில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
போராட்டக்காரர்களை சுற்றிவளைத்து பொலிஸ், அதிரடிப்படி, இராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.