யாருக்கும் அடங்காத காட்டாறாக கொட்டமடிக்கும் மட்டக்களப்பு மங்களராமைய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாக மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இதற்கான அறிவித்தலை பிக்குவிற்கு அனுப்பியது.
பிக்குவை நீதிமன்றத்தில் முன்னிலையாவதுடன், பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு, பன்குடா பகுதியில் பிக்கு நேற்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன், அரச உத்தியோகத்தர்கள் மூவரை அடைத்து வைத்திருந்தார். பிறிதொரு உத்தியோகத்தரை தாக்க முயன்றார். அத்துடன், கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.