Breaking News



மட்டக்களப்பை நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட பிரபல ரௌடிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் கிரனேட் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸார் கைதுசெய்யச் சென்றபோது பொலிஸார் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்கேணி பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கைதான வாள்வெட்டு குழுவின் தலைவரான தணு என்பவர் 2018ஆம் ஆண்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதாக நீதிவான் நீதிமன்றில் வழக்கு நிலைவையில் உள்ளது.

மேலும் அவர்மீது ஒன்பது குற்றங்கள் தொடர்பில் வழக்குகள் நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபருடன் அந்த குழுவினை சேர்ந்த இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவுடன் தொடர்புபட்ட மேலும் நான்கு பிரதான நபர்களும் ஏனைய உறுப்பினர்கள் சிலரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் கடந்த காலத்தில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், நாவற்கேணி பகுதியில் தனிமையில் வீடுகளில் இருக்கும் பெண்களையும் அச்சுறுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கஞ்சா உள்ளிட்டு போதைப்பொருள் விற்பனைகளிலும் அவர்கள் ஈடுபட்டுவந்தமை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.