Breaking News



நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 28 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 11 பேருக்கும், பங்களதேஸில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும், பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும் குவைட், கட்டார், வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள 5 இந்திய கடலோடிகளுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 60 வயதான ஆண் ஒருவரே கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

கடலோடியாக செயற்பட்ட அவர், கடந்த 2 ஆம் திகதி பஹ்ரேனில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
நாடு திரும்பும் வரை அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதற்கான அடையாளங்கள் காணப்படாத நிலையில் கடந்த 9 ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய மரணத்திற்கான நெருங்கிய காரணம் மாரடைப்பு என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3005 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், கொவிட் 19 தொற்றுறுதியாகி 244 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.