மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேளவாத்திய கலைஞரான புவிதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு ஆலயம் ஒன்றுக்கு மேள வாத்தியம் இசைக்க சென்ற நிலையில் இன்று காலை தனது வீட்டின் முன்பகுதியில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments
Note: Only a member of this blog may post a comment.