Breaking News


காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொடவின் மனைவி சந்தியா எக்னேலிகொட, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் நேற்று விபூதியை தூவியுள்ளார்.

பிரகீத் எக்னேலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளுக்கு முன்னர் சந்தியா எக்னேலிகொட, முகத்துவாரம் காளியம்மன் கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்துள்ளார். அங்கு வழங்கப்பட்ட விபூதியையே அவர் நீதிமன்ற வாயிலில் தூவியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரகீத் எக்னேலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு கொழும்பு புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதுடன் அவர் காணாமல் போனார். இந்த சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் படையினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Note: Only a member of this blog may post a comment.