தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்த விதிக்கப்பட்ட தடைகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று மீண்டும் ஒன்று கூடுகிறார்கள்.
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை தடுக்கும் கோட்டாபய அரசின் நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள, வழங்கப்பட்ட 3 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய இன்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இன்று ஒன்றுகூடுகிறார்கள்.
மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கும்.
நாளை யாழ்ப்பாண நீதிமன்றம் சாதகமான தீர்ப்பளிக்கலாமென்ற எதிர்பார்ப்பும் நிலவி வரும் நிலையில், இன்று சந்திப்பில் தீர்க்கமான முடிவெதுவும் உடனடியாக அறிவிக்கப்படாது என அறிகிறது.
நாளைய தீர்ப்பு தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்கும் விதமாக அமைந்தால் என்ன செய்வது, எப்படியான நகர்வை மேற்கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்.
நாளைய தீர்ப்பு வெளியாகுவதற்கு முன்னர் எந்த நிலைப்பாட்டையும் இன்று அவசரகதியில் அறிவிக்க வாய்ப்பில்லை. தீர்ப்பு பாதகமாக வெளியானால், நாளை மாலை மீண்டும் கூடி, ஆராயப்படும்.
அனேகமாக 25 அல்லது 26ஆம் திகதி ஆர்ப்பாட்ட போராட்டம் அல்லது கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படலாமென தெரிகிறது.
No comments
Note: Only a member of this blog may post a comment.