Breaking News



பொகவந்தலாவ - சீனாகலை தோட்ட பகுதியில் பத்து வயது சிறுவனை தூக்கி நிலத்தில் அடித்ததாக கூறப்படும் சந்தேகநபரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 5ல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் சமரசம் செய்து இரண்டு மாணவர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதை அடுத்து அத்திரமடைந்த தந்தை தாக்கிய மாணவனின் வீட்டுக்கு சென்று குறித்த மாணவனை தூக்கி நிலத்தில் அடித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு பாரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஏ. எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


No comments

Note: Only a member of this blog may post a comment.