வடக்கு, கிழக்கு நாளை முற்றாக முடங்கும்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

வடக்கு, கிழக்கு நாளை முற்றாக முடங்கும்!


நாளை (28) தமிழர் தாயக பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றாக முடங்வுள்ளது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை- அடிப்படை மனித உரிமையை- இராணுவ மற்றும் நிர்வாக பலத்தின் மூலம் முடக்கும் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, நாளை வடக்கு கிழக்கில் பொது முடக்கத்திற்கு 10 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இந்த அழைப்பை ஏற்று வடக்கு, கிழக்கில் நாளை முழுமையான கதவடைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, வடக்கு கிழக்கில் இயங்கும் அனேக வர்த்தக சமூகங்கள் நாளை முழு அடைப்பை மேற்கொள்வதென தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலையில் இயங்கும் வர்த்தக சமூகங்கள் இதற்கான முடிவை எடுத்துள்ளன.

இதனால் இந்த மாவட்டங்களில் நாளை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாது.

இலங்கை ஆசிரியர் சங்கம் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதான ஆசரியர் சங்கம் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதால், நாளை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

அரச, தனியார் துறையினரை ஒரு நாள் முடக்கத்திற்கு ஒத்துழைப்பளித்து, தமிழ் மக்களின் உரிமைக்குரலை உரத்து சொல்வோம் என போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பல்வேறு அரச ஊழியர் சங்கங்களும் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விடுத்துள்ளனர்