தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திடுகிறது.
இன்று காலை 11 மணிக்கு வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டு வருகிறார்கள்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணிகள் க.சுகாஷ், ந.காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஏனைய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது, கடித வரைபு தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
No comments
Note: Only a member of this blog may post a comment.