இலங்கையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இது தொடர்பாக தெரிவிக்கையில், மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் எலிக் காய்ச்சல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது இலங்கையில் 6096 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அத்துடன், 70 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள 6096 எலிக்காய்ச்சல் நோயாளிகளில் 1341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
அனுராதபுரம், கேகாலை, களுத்துறை மற்றும் பொலன்னருவை ஆகிய மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக தெரிவித்தார்.