Breaking News



மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் 75 மில்லமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல்,வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வீசும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,வங்காள விரிகுடாவில் குறைந்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்பட்டதால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.