Breaking News


கிளநொச்சியிலுள்ள அங்கஜன் இராமநாதனிற்கு சொந்தமான கட்டிடத்தினால் நேற்று (22) நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை உருவெடுத்தது.

மாகாண நிர்வாகத்தின் அதிகாரத்திற்குட்பட்ட கிளிநொச்சி நகரத்திலுள்ள கட்டிடமொன்றை கரைச்சி பிரதேசசபை, பிரதேச செயலகம் என்பவற்றின் அனுமதியின்றி, காட்டு சட்டத்தை பயன்படுத்தி அரசு அடாவடியாக பெற்று, லங்கா சதொச வர்த்தக நிலைய கட்டிடம்  அமைக்கப்பட்டுள்ளது, உள்ளூர் அதிகார மையங்களை துஷ்பிரயோகம் செய்து அந்த காணியை எப்படி பெற்றீர்கள் என, கிளிநொச்சி எம்.பி, சி.சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

நகர அபிவிருத்தி அதிகாரரபை அபிவிருத்திக்காக காணியை சுவீகரித்ததாகவும், அதற்கு சட்டத்தில் இடமுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சி மக்களின் நன்மைக்காகவே சதொச கட்டிடம் அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும், காணி பெற்றதில் பிரச்சனைகள் இருந்தால் தான் கிளிநொச்சி வரும்போது ஆராயலாமென பந்துல தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சி அபிவிருத்திக்கு கூட்டமைப்பு தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், அதை நிராகரித்த சிறிதரன், தாம் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், மாட்டை பற்றி தாம் கேள்வியெழுப்பினால், மாட்டை தென்னையில் கட்டிவிட்டு, தென்னையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என பதிலடி கொடுத்தார்.

குறிப்பிட்ட காணி முன்னைய மஹிந்த ஆட்சிக்காலத்தில், அங்கஜன் இராமநதனினால் நீண்டகால குத்தகைக்கு பெறப்பட்டு, அடுக்கு மாடி வர்த்தக தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் சதொச இயங்கி வருகிறது. மேல் தளத்தில் திரையரங்கு உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

No comments

Note: Only a member of this blog may post a comment.