தியாக தீபம் திலீபனின் நினைவு தினமான 26ஆம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தவுள்ளதாக தமிழ் கட்சிகள் இணைந்து அறிவிப்பு விடுத்துள்ளன.
நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்து அவசரமாக ஒன்றுகூடிய பத்து தமிழ் கட்சிகள் இது குறித்து தீர்மானித்துள்ளன.
இதேவேளை 26ஆம் திகதி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஆலயங்களில் விசேட பூஜைகள் மூலமும் வீடுகளில் இருந்தவாறும் நினைகூறுமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
அன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை எட்டு மணிமுதல் மாலை ஐந்து மணிவரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.