Breaking News



கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மே மாதம் 50,000ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 36 லட்சமாக அதிகரித்துள்ளது. தினந்தோறும் அதிகபட்சமாக 70,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.8 மடங்கு அதிகமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில்,
* குணமடைந்தவர்கள் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.
* மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
* யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
* சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.