Breaking News


வடக்கு மாகாணத்துக்கு வரும் அமைச்சர்கள் ஏ 9 வீதியூடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மட்டும் சென்றுவிட்டு திரும்பாது மிகவும் பாதிப்படைந்த முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும் வந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உழைத்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும், கிராம மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாகவும் நேற்று மாலை குறித்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் சுதந்திரபுரம் மத்தி, சுதந்திரபுரம், இருட்டுமடு கிராம மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கிராமங்களில் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறியிருந்தனர். குறிப்பாக விவசாய அபிவிருத்திகள் தொடர்பாக அதிகளவான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இருந்தது.

உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அண்மை நாட்களாக யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர்கள் வருகின்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருக்கின்ற போதும் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மட்டும் வந்து விட்டு சென்ற அமைச்சர்கள் அங்குள்ள நிலைமைகளை வைத்து முடிவுகளை எடுக்காது மிகவும் பாதிக்கப்பட்ட இடமாகிய முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற இடங்களுக்கும் அவர்கள் வர வேண்டும்.

வடக்கு மாகாணத்துக்கு வருகைதரும் அமைச்சர்கள் ஏ.9 வீதியூடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மட்டும் சென்றுவிட்டு திரும்பாது மிகவும் பாதிப்படைந்த முல்லைத்தீவு வவுனியா மன்னார் மாவட்டங்களுக்கும் வந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக அண்மையில் விவசாய அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அவர் தமிழில் பேசக் கூடியவர். மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றவர். அதேபோன்று எங்களுடைய மக்களுடைய பிரச்சனைகளையும் நேரில் வந்து மக்களிடம் கலந்துரையாடி நமது மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைபாடுகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக பகிரங்க அறிவித்தல் விடுவதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மத்தியில் தெரிவிக்க உள்ளதாகவும் ஊடகங்கள் இந்த விடயங்களை வெளிக்கொண்டு குறித்த அமைச்சர்களுக்கு செல்லுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.