Breaking News


யாழ்ப்பாண பொலிசாரின் தாக்குதலில் காயமடைந்துள்ள இளைஞர்கள் 3 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தலை, உடம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு இளைஞனின் செவிப்பறை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தை பொலிசார் மறித்தபோது, நிற்காமல் தப்பிச்செல்ல முனைந்துள்ளது. உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடித்த பொலிசார்,அதில் பயணம் செய்த இளைஞர்களை கடுமையாக தாக்கியிருந்தனர்.

பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறையிட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை யாழ் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் 3 இளைஞர்களும் முற்படுத்தப்பட்டனர். அன்று இரவு 11.30 அளவில் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

காயமடைந்த மூவரும் நேற்று அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.