Breaking News


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் விவகாரத்தை எதிர்வரும் 22ஆம் திகதி தீர்மானிப்பதென முடிவாகியுள்ளது. அதன்படி, 22ஆம் திகதி வரை எம்.ஏ.சுமந்திரனே ஊடகப் பேச்சாளராக தொடர அனுமதிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்காளிக்கட்சி தலைவரான த.சித்தார்த்தன் கலந்து கொள்ளவில்லை.

இதனால், பேச்சாளர் விவகாரத்தை இன்றும் தீர்மானிக்கவில்லை. நாளை மீண்டும் கூடி பேச்சாளரை தீர்மானிக்கலாமா என ஆலோசித்தபோதும், நாளையும் சித்தார்த்தன் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், அடுத்த அமர்வில்- 22ஆம் திகதி – பேச்சாளரை தீர்மானிக்க முடிவாகியுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.