Breaking News


வர்த்தமானியிடப்பட்ட 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார்.

உத்தேச 20வது வரைபை அண்மையில் அரசாங்கம் வர்த்தமானியிட்டிருந்தது.அதனை வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் விமல் வீரவன்சவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

20வது திருத்தத்தின் முரண்பாடான அம்சங்கள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு நான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கொண்டு சென்றோம். இதையடுத்து, 20வது திருத்தத்தை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, ஏற்கனவே வெளியான வர்த்தமானி அறிவிப்பின் படி நாடாளுமன்றத்தில் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது.

குழுவின் அறிக்கை கிடைத்ததும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும்.

பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு திங்கட்கிழமை கூடவுள்ளது என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.