Breaking News



தலைமுடி உதிர்வு பிரச்சினையை உடனடியாக நிறுத்தி, வழுக்கை விழுந்த இடத்தில், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்ய முடியும்

இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் தலை மொத்தமாக வழுக்கையாகிவிடும் என்று நினைப்பவர்கள் இந்தப் பதிவு மிகவும் பயனுடையது.


தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வையும், உடனடி தீர்வையும் தரக்கூடிய சக்தி நம் சமையலறையில் தலான் இருக்கின்றது. அட வேறு எதுவுமில்லை வெந்தயம் தான்.

2 தேக்கரண்டி அளவு வெந்தயத்தை முதல் நாள் இரவே, சுத்தமான குடிநீரில் இட்டு நன்றாக ஊற வைத்துவிடுங்கள். ஒரு டம்ளர் அளவு தண்ணீருக்கு 2 தேக்கரண்டி வெந்தயம் போதுமானது.


மறுநாள் காலை எழுந்து, வெந்தயத்தை மட்டும் தனியாக பிழிந்து, தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து, அந்த தண்ணீரை உங்களது தலைமுடியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

(ஹேர் ஸ்ப்ரே பாட்டில் இருந்தாலும் கூட, அதில் இந்த வெந்தய தண்ணீரை ஊற்றி, முடிகளின் வேர் பகுதிகளில் படும்படி ஸ்பிரே செய்து மசாஜ் செய்யமுடியும்)

அதன் பின்னர் இரண்டு மணிநேரம் நன்றாக இந்த தண்ணீர் உங்களது மயிர்கால்களில் ஊறிய பின்பு, தலையை நன்றாக கழுவிவிட வேண்டும்.


ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த முறையை பின்பற்றி கொள்ளலாம். நம்முடைய முடிகளில் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்த பின்பு அப்படியேவும் விட்டு விடலாம்.

ஆனால், வெந்தயத் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால், குளிர்ச்சியான உடல் நிலை உள்ளவர்களுக்கு, காய்ச்சல் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

மற்றைய முறை,

2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் (கருவேப்பிலையை கட்டாயம் கழுவி விட்டு தான் பயன்படுத்த வேண்டும்.) ஒரு சட்டியில் இட்டு இரண்டு நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, பொடி செய்து வைத்திருக்கும் வெந்தயம் கருவேப்பிலை பொடியை எண்ணெயில் சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும்.


இந்த எண்ணெய் ஆறியபின்பு வடிகட்டி எடுத்து, இந்த எண்ணெயை தினந்தோறும் தலையில் தேய்த்து பயன்படுத்தி வர வேண்டும். இதை பயன்படுத்தி 10 நாட்களில் உங்களுடைய முடி உதிர்வு பிரச்சினை நின்று, முடி வளர்வதை கண்கூடாக காணலாம்.

இதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த முறைகளை பின்பற்றி வரும் போது உங்களது முடியானது பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும். 10 நாட்களிலிருந்து 1 மாதத்திற்குள் உங்களது தலை முடியில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Note: Only a member of this blog may post a comment.