Breaking News



அர்ஜெண்டினாவில் 10 வயது சிறுமி கருத்தரித்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
பத்து வயதான சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் மாற்றந்தந்தை Horacio Insaurralde (31) உடன் வசித்து வந்தார்.

அப்போது Horacio Insaurralde சிறுமியை சீரழித்துள்ளார். பின்னர் சிறுமியின் தாய்க்கு Horacio Insaurralde உடன் சண்டை ஏற்பட்டு அவரை பிரிந்து சென்றிருக்கிறார்.
சில மாதங்கள் கழித்து சிறுமியின் வயிறு பெரிதாக ஆனதை கண்ட அவர் பாட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும், அதே சமயம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தரித்தால் அதை கலைக்க உரிமை கோரலாம்.
ஆனால் சிறுமியின் வயிற்றில் உள்ள கரு வளர்ந்து விட்டதால் அதை கலைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையில் சிறுமிக்கு அங்குள்ள தேவாலயத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சமீபத்தில் சிறுமிக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்ததால் இயற்கையாக பிரசவித்தால் அது தாயாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கருதினர்.
இதையடுத்து சிசேரின் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது.

இதனிடையில் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமாக இருந்த அவரின் மாற்றாந்தந்தை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை.

No comments

Note: Only a member of this blog may post a comment.