Breaking News

மணிவண்ணன் விவகாரம் உட்கட்சி விவகாரம். இதில் வெளியாட்கள் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்று தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது, இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மணிவண்ணன் விவகாரம் உட்கட்சி விவகாரம். இதில் வெளியாட்கள் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம்.

இது குறித்து பலவிதமாக பேசப்படுகிறது. தேர்தல், பதவிநிலைப் போட்டியென சொல்கிறார்கள். இது எதுவுமே இந்த விடயத்தில் சம்பந்தப்படவில்லை.

25 பேரைக்கொண்ட மத்தியகுழு கூடி இது குறித்து ஆராய்ந்து முடிவெடுத்துள்ளது. அந்த முடிவை மணிவண்ணனிற்கு அனுப்பி விட்டோம். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது தனக்கு கிடைத்ததென மணவண்ணன் உறுதிப்படுத்தினார். ஆனால் அதில் கையொப்பமில்லையென்றார். தலைவர், செயலாளரின் கையொப்பத்துடன் பதிவுத்தபாலில், மத்தியகுழுவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணனின் பதிலை மத்தியகுழு எதிர்பார்க்கிறது. அது கிடைத்த பின்னர், மணிவண்ணன் விவகாரம் கட்சி உறுப்பினர்களிற்கு பகிரங்கப்படுத்தப்படும். இப்போதைக்கு மணிவண்ணன் விவகாரத்தில் எதையும் பேச முடியாது என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.