Breaking News


கொரோனா தொற்று அபாயத்தையடுத்து மூடப்பட்ட பின்னர் மீளவும் திறக்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நேரங்களில் கல்வி அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 02 முதல் தரம் 10, 11, 12 மற்றும் 13 மாணவர்களிற்கான பாடசாலை நேரம் காலை 07.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையாகும்.

இது தொடர்பாக அனைத்து கல்வி வலயங்களிற்கும் மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் கட்டங்களாக திறக்கப்பட்டு ஓகஸ்ட் 17 முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

இதன்போது, மேற்படி வகுப்புக்களிற்கான கற்றல் நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையென முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments

Note: Only a member of this blog may post a comment.