Breaking News



1. கூட்டமைப்பு சார்பில் ஶ்ரீதரன் சித்தார்த்தன் சசிகலா தெரிவு என்று ஊகம் பரப்பப்பட்டது. (சசிகலாவுக்கு வாழ்த்தும் சொல்லப்பட்டிருக்கும்- அவர் சொல்வதும் அந்த அடிப்படையில்தான்)

2. பின் கொஞ்சம் செல்ல ஶ்ரீதரன் சித்தார்த்தன் சுமந்திரன் உள்ளே சசிகலா வெளியே என்று பரப்பப்பட்டது. சசிகலாவுக்காக போராட ஆரம்பித்தார்கள்.(மறுபடியும் ஊகம்!)

3. சிறிது நேரத்தில் ஶ்ரீதரன் சசிகலா சுமந்திரன் உள்ளே, சித்தார்த்தன் வெளியே என்று கூறி சித்தார்த்தனுக்காக களம்கண்டார்கள் மறவர். (மறுபடியும் ஊகம்!)

4. இறுதியில் உத்தியோகபூர்வ வாக்குகள் வெளியிடப்பட்டபோது சசிகலா வெளியே. மூன்றாமிடம் சித்தார்த்தன் என்றதும், சசிகலா ஏமாற்றப்பட்டதாக கூற ஆரம்பித்தார்கள். சசிகலாவும் தான் முதலில் 90% எண்ணப்பட்டபோது உத்தியோகபூர்வமற்ற (ஊகம்!)  முறையில் சிலரால் வாழ்த்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

5. விக்கி கட்சியில் விக்கியை விட அருந்தவபாலனுக்கு தான் அதிகம் வாக்குகள். இப்போது தெரிகிறதா கஜேந்திரகுமார் தான் மாற்று என்று என கூறினார்கள். பார்த்தால் இறுதியில் விக்கியருடன் ஒப்பிடுகையில் அருந்தவபாலனுக்கு 9000 வாக்குகள் வித்தியாசம்!

6. இரண்டாமிடம் இருக்கும் சுமந்திரனுக்கும் சித்தார்த்தனுக்கும் நான்காயிரம் ஓட்டுகளும் மூன்றாமிடமிருக்கும் சித்தருக்கும் சசிகலாவுக்கும் எண்ணூறு ஓட்டுகளும் வித்தியாசமாக இருக்கிறது. சுமந்திரன் ஐந்தாமிடத்திலிருந்து உள்ளே வந்துவிட்டார் என்கிறார்கள். ஐந்தாமிடம் இருக்கும் சரவணபவனுடன் ஒப்பிடுகையில் சுமந்திரனுக்கு ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசம்.

7. சுமந்திரனை மட்டும் உள்ளே அனுமதித்தார்கள் என்கிறார்கள்.சரி அப்படியே இருக்கட்டும்! அங்கு இருந்த அத்தனை கட்சி தலைவர்களும் அதை பார்த்துவிட்டு அட போகட்டுமென்று தேர்தல் கமிஷனுக்கு முறைப்பாடு செய்யாமல் சும்மாவா இருந்தார்கள்? 

ஏதாவது ஒழுங்கு புரிகிறதா? யாருக்கு யாரின் மேல் கரிசனை என்று புரிகிறதா?

அப்படி புரியாவிட்டாலும் பரவாயில்லை.வாக்கு மீள் எண்ணிக்கைக்கு போகவேண்டும் சசிகலா அவர்கள். I stand with her! அதன் பின்னராவது உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் நம்பிக்கையாக அவர் கதைக்கலாம்!

No comments

Note: Only a member of this blog may post a comment.