Breaking News



பொலன்னறுவை – அரலகங்வில பகுதியில், போகாஸ் சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.20 மணியளவில் தெயத்தகண்டியலிருந்து அரலகங்வில நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று மேலதிக வகுப்பை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவ ரோயல் கல்லூரியின் 11 ஆம் தர மாணவர் தேசன் கருணாதிலகே ராஜபக்ஷ முதியன்சலேஜ் ஹசின் (16) என அடையாளம் காணப்பட்டது.
விபத்தில் காயமடைந்த மற்ற 10 மாணவர்களும் 16 வயதுடையவர்களே. 

அவர்களில் 6 பேர் அரலககன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்ற 4 பேர் பொலன்னருவ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாகன சாரதி மது போதையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.

வாகனத்துடன் தப்பியோடிய சாரதி மற்றும் மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விசாரணையில் அவர்கள் அனைவரும் மது போதையில் இருப்பது தெரியவந்தது.
மாணவரின் மரணம் தொடர்பாக இன்று (10) நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று பொலிசார் தெரிவித்தனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.