Breaking News



பிரித்தானியாவில் ஒரு வாரத்துக்கு மேலாக காணாமல் போயுள்ள 14 வயது சிறுமி குறித்த கவலை அதிகரித்திருப்பதாக பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Atlanta Butler என்ற 14 வயது சிறுமி Sandy நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி மாயமானார்.
அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தான் கடைசியாக அவர் காணப்பட்டார்.

Atlanta காணாமல் போய் ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவரின் நிலை என்ன என இன்னும் தெரியவில்லை.
பொலிசார் கூறுகையில், கடந்த 26ஆம் திகதி Sandy இரயில்வே நிலையத்துக்கு வந்த Atlanta லண்டனுக்கு செல்லும் இரயிலில் ஏறி சென்றிருக்கலாம் என நம்புகிறோம்.

பின்னர் 6 மணிக்கு லண்டன் பிரிட்ஜ் ஸ்டேசனுக்கு வந்து Dartford செல்லும் இரயிலில் ஏறி சென்றுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Atlanta குறித்து நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம், அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.