Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

நாளாந்த உழைப்பாளர்களிற்கு சொந்த நிதியில் உணவளித்த கூட்டமைப்பு தலைவர்!

  admin       வியாழன், 26 மார்ச், 2020


நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாகவும், நோய் பரவுதலைக்கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளதுடன், அவசியமின்றி வீதியால் பயணிப்போர் யாவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அன்றாட உழைப்பாளிகள், கூலி வேலை செய்வோர் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அன்றாட தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன், அன்றாட உணவுக்கும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் யாழ் – காரைநகர் வீதியில் அமைந்துள்ள அராலி வீதி, ஓட்டுமடம் பகுதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நாளாந்த உழைப்பாளி மக்கள் உணவுக்கான கஷ்ட நிலையை எதிர்நோக்கி வரும் நிலையில், முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் தனது சொந்த நிதி உதவியில் அவர்களிற்கு இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

ஊரடங்கு வேளையில், தாம் நடமாட முடியாத சூழ்நிலையில் வீடு தேடி வந்து உதவி செய்தமைக்கு புதிய சோனகத்தெரு வட்டார தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜெகன், யாழ்.மாநகரசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந், மேற்படி உதவியை வழங்கிய முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கு தமது நன்றியினைத்தெரிவித்துக்கொண்டனர்.

மேற்படி உணவு வழங்கலில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதனும் கலந்துகொண்டிருந்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நாளாந்த உழைப்பாளர்களிற்கு சொந்த நிதியில் உணவளித்த கூட்டமைப்பு தலைவர்!

Previous
« Prev Post