Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

முடக்கப்பட்ட தாவடி கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கை!

  admin       வியாழன், 26 மார்ச், 2020


யாழ்ப்பாணத்தில் முதலாவது கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும் இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

சுவிசிலிருந்து வந்து மத போதனை நடத்திய போதகர் மூலம் யாழில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது. போதகரை 20 நிமிடம் சந்தித்து பேசிய தாவடியை சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரர் கொரோனா தொற்றிற்கு இலக்கானார். கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். அவர்களிற்கு தேவையான உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன.






logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! முடக்கப்பட்ட தாவடி கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கை!

Previous
« Prev Post