Breaking News

வீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...!

விடுமுறை நாளான இன்று முக்கிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இலங்கை மருந்தாக்கக் கூட்டுதாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உள்ள காணொளி ஒன்றின் மூலம் தேவையற்ற முறையில் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்த்துகொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 11 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ள நிலையில், நேற்றைய தினம் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அவர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

குறித்த எழுவரும் இதாலியிலிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர்கள் என்பதோடு அவர்கள் மட்டக்களப்பு கந்தகாடு பகுதியில் அமைந்துள்ள தனிமைபடுத்தல் சிகிச்சை மத்தியநிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவின் 29 மாநிலங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் காலம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.