Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

முகக்கவசம் அணியாதது குற்றமல்ல… ஆரோக்கியமானவர்கள் அணிய வேண்டிய அவசியமில்லை: சுகாதார அமைச்சு விளக்கம்!

  admin       வியாழன், 26 மார்ச், 2020


முகக்கவசம் அணியாததை ஒரு குற்றமாக கருத வேண்டாமென பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க.

பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்கள், அவர்களின் நெருங்கிய நபர்கள், நோய்த் தொற்று வாய்ப்புள்ளவர்கள், நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பவர்ளே முகக்கவசம் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் முகக்கவசங்களை அணிய வேண்டுமென சுகாதார அமைச்சு பரிந்துரைக்கவில்லை. முகக்கவசங்களை தவறாகப் பயன்படுத்துவதால் நோய் பரவுவதை அதிகரிக்கலாம். பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை பொது இடங்களில் வீசுவதன் மூலம் நோயின் பரவலை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நபர்களிடையே குறைந்தது 1 மீட்டர் இடைவெளியை வைத்திருப்பது, சோப்பினால் 20 விநாடிகள் கைகளை கழுவுதல், கண்கள், மூக்கு மற்றும் வாயை அழுக்கு கைகளால் தொடாமல் தவிர்ப்பது, தும்மும்போது முழங்கையின் உட்புறத்தினால் மூக்கு மற்றும் வாயை மூடுவது போன்றன நோய பரவலை தடுக்கும் சிறந்த வழிகள்.

ஆரோக்கியமான நபருக்கு முகக்கவசங்களை பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு பரிந்துரைக்கவில்லை. என்றாலும், ஒரு நபர் அதைப் பயன்படுத்த விரும்பினால் முகக்கவசங்களைத் தேர்ந்தெடுப்பதில் சுகாதார அமைச்சு ஒருபோதும் தலையிடாது. இருப்பினும், இது ஒரு குற்றம் என கருதி ஆரோக்கியமானவர்கள் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான ஒருவர் முகக்கவசங்களை பயன்படுத்துவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுகிறார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! முகக்கவசம் அணியாதது குற்றமல்ல… ஆரோக்கியமானவர்கள் அணிய வேண்டிய அவசியமில்லை: சுகாதார அமைச்சு விளக்கம்!

Previous
« Prev Post