Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

கொரோனோவின் பிடியில் இடர்கொண்டு தவிக்கும் எம் தாயக உறவுகளுக்கு உதவ முகநூல் மூலம் ஒன்றினைந்து உதவுவோம் வாருங்கள்....

  admin       வியாழன், 26 மார்ச், 2020


எம் அன்பான உறவுகளே...

நாடுகளெங்கும் நிலவி வரும் கொரோனோ அச்சுறுத்தல் தற்போதைக்கு நீங்குவதாக இல்லை. பெரும் உயிர் அழிவையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தும் இத் தொற்றுநோயை சமாளிக்க அமெரிக்க ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உற்பட உலக நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் அதற்காய் செலவிடும் பணத் தொகை என்பன கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. 

இலங்கையில் இதுவரை வெறும் 100 நோயாளிகள்தான் இனம்காணப்பட்டுள்ளனர். இந்த குறுகிய காலத்தினுள் இலங்கை தன் சக்தி முழுவதையும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவழித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும் ஏழை எளிய மக்களுக்கென அறிவித்த உதவித்திட்டங்கள் இன்னும் கிராமங்களை சென்றடையவில்லை. அறிவிப்புக்களை நடைமுறைப்படுத்த எந்த திட்டங்களும் இல்லை. 

அதற்கு மேலாக கையிருப்பில் உள்ள அத்தியாவசிய பொருட்களை வியாபார நிலையங்களுக்கு  தட்டுப்பாடின்றி அனுப்பிவைப்பதில் கூட இலங்கை முன்னேற்றத்தை எட்டவில்லை. ஊரடங்கு சட்டங்கள் அமுலாகி ஒரு வாரத்தினுள் பெருவாரியான வியாபார நிலையங்கள் காலியாகிவிட்டன. சிறு வியாபாரிகளிடம் பொருட்கள் இல்லை. அடுத்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கூட மக்களுக்கு பொருட்கள் தாராளமாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

நாடு முழுவதும் குறைந்த பட்சம் ஆயிரம் நோயாளர்கள் இனம்காணப்பட்டால் நாடு முற்றிலும் ஸ்தம்பிதம் அடையும் நிலைதான் ஏற்படும். வடக்கில் முதல் நோயாளி இனம் காணப்பட்டு இன்னும் ஒரு  வாரம் கடக்கவில்லை நூற்றுக்கணக்கானவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். அடுத்து வரும் வாரத்தில் பெரும் பூகம்பம் போல் சடுதியாக தொற்று வெளித்தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெளிப்படும் அபாயம் இருக்கிறது. பல உலக நாடுகளிலும் இதுதான் நடந்தது இதைத்தான்  மருத்துவர்களும் எதிர்வு கூறுகின்றனர். எச்சரிக்கையாக இருக்க கோருகின்றனர்  யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாமைக்கு காரணமும் அதுதான். 

நாங்கள் முகநூல் நண்பர்கள் குழுமமாக ஒன்றினைந்து கடந்த (2018 டிசம்பர்) வன்னியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு பாரிய உதவியை செய்திருந்தோம். அன்று இடரினை எதிர்கொண்டிருந்தது வடக்கு மாத்திரமே. அதனால் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தெற்கில் இருந்தும் பாரிய உதவிகள் குறுகிய காலத்தினுள் கிடைத்தது அதனூடாக எங்கள் சமூகமும்  மீட்சியடைந்தது. 

ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை பாதிப்பு உலகம் தழுவியதாக உள்ளது. எமக்கு உதவி செய்தவர்களுக்கே உதவி தேவையாக உள்ளது. இங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல அமைப்புக்கள் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் கொரோனா பிரச்சனை காரணமாக இடர்களை எதிர்கொண்டோருக்கு தம்மால் இயன்ற  உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.  யாழ்ப்பாணத்தை பொருத்தவரை பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்தால் சில மாத ஊரடங்கை கூட சமாளிக்கும் அளவுக்கான கொள்வனவு வலு எங்கள் மக்களிடம் உண்டு. அனேகமாக அரச ஊழியர்களும் புலம்பெயர் தேச தொடர்புகளும் உள்ளவர்கள் அதிகம் வசிப்பதால் நிதி தொடர்பாக பாரிய சிக்கலை அவர்கள் எதிர்கொள்ள மாட்டார்கள் அத்தோடு காலம் காலமாக சேமிப்பு பழக்கம் கொண்ட சமூகம் யாழ்ப்பாண சமூகம். 

ஆனால் அருகில் உள்ள வன்னியை பொருத்தவரை அப்படி கிடையாது. இங்கு சேமிப்பு பழக்கம் என்பது அடியோடு இல்லை. அரச உத்தியோகமும் அதிகமில்லை வெளிநாட்டு தொடர்பும் மிகக் குறைவு. இங்கு கிராம மட்டத்தில் அனைவரும் அன்றாடம் தொழில் செய்து அதைவைத்து வாழ்க்கை நடத்துவோராகவே அதிகம் உள்ளனர். இங்கு உள்ளவர்கள் மேசன் வேலைகளுக்கும், கூலி வேலைகளுக்கும் கடைகளிலும், வயல்களிலும், தனியாரிடமும் என்று நிறுவன மயப்படுத்தப்படாத தொழில்களையே செய்கின்றனர். 

இப்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் இவர்களின் தொழில் முற்றாக முடங்கியுள்ளது. ஆகக்கூடியது 1000/- ரூபாவேனும் இவர்களைப்போன்ற குடும்பங்களில் சேமிப்பில் இருக்காது.
இப்போதே இங்கு G.S ஒப்பீஸ் வாசலில் அரசாங்கத்தின் அறிவிப்பை கேட்டு மக்கள் உற்கார தொடங்கிவிட்டனர் எனினும் உதவிகள் எதுவும் வந்து சேரவில்லை. 

வன்னியை பொருத்தவரை இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தம்முடைய சொந்த நிதியில் இருந்து மக்களுக்கு சிறிய உதவியை செய்கின்றனர். அது இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியாது. அதை தவிர பாரிய அளவில் அமைப்புக்களோ நிறுவனங்களோ இங்கு உதவிகளை வழங்கவில்லை. அரசாங்கத்தின் உதவிகள் வந்து சேரவில்லை. மானியவிலை பருப்பும் முட்டையும் ரின் மீனும் கூட கிடைப்பது அரிதாக உள்ளது சதொச விற்பனை நிலையம் பெரு நகரத்திற்கு ஒன்றுதான் உள்ளது. 

நாம் ஒட்டுமொத்தமாக கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோம் உலகெங்கும் பரந்துவாழும் எம் உறவுகள் எம்மை விடவும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு பின்னால் வலுவான மற்றும் வசதி கொண்ட அரசாங்கங்கள் உண்டு என்பது மட்டும் தான் ஆறுதலான விடயம். இங்கு அதுவும் இல்லை. 

இடரோடு இடராக துயரத்தோடு துயரமாக எங்கள் தாயக உறவுகளுக்கு தோள்கொடுக்கவென எம்மோடு கரம் கோர்க்க ஆர்வமுள்ளவர்கள் எங்கள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். பட்டினியில் இருந்து எம் சமூகத்தை பாதுகாக்கும் உயரிய பணிக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு உதவியும் ஒரு வேளை உணவினையேனும் எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகளுக்கு சென்று சேரும். 

உங்கள் உதவிகள் முகநூலில் வெளிப்படையாக பகிரப்படும். ஒவ்வொரு ரூபாய்க்குமான கணக்குகளும் பகிரப்படும். 
நாம் இதுவரை உதவிகள் எதுவும் கிட்டாத வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளையும், அரசாங்கம் வழங்கும் மானிய விலை பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூட வசதியற்ற குடும்பங்களுக்கு அதை பெற்றுக்கொடுக்க உதவியும், உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விவசாய பொருட்களை கொள்வனவு செய்து நியாய விலையில் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ஏற்பாடுகள் செய்யவுள்ளோம்

எங்களின் இந்தப்பணிக்கு முதற்கட்டமாக கனடாவில் இருந்து  
#Yamuna Nithiananthan 50,000/- 
#Nathan kathirgamanathan 25,000/- 
#Vimali mayuri 1,000/- 
லண்டனில் இருந்து #Gulasinganathan Mukunthan ...../- 
ஆகியோர் வழங்க முன் வந்துள்ளனர். 

உங்கள் சிறு உதவி ஒரு குடும்பத்தின் பசியாற உதவும் பட்டினியில் இருந்து காக்க உதவும்....

நன்றி
சு.பிரபா
சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்
தொடர்புக்கு:- 0770837766
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கொரோனோவின் பிடியில் இடர்கொண்டு தவிக்கும் எம் தாயக உறவுகளுக்கு உதவ முகநூல் மூலம் ஒன்றினைந்து உதவுவோம் வாருங்கள்....

Previous
« Prev Post