Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

கொலையானவர்களுக்கு கிடைத்த நீதி கொலையாளிக்கு விடுதலை... இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் !

  admin       வியாழன், 26 மார்ச், 2020


மிருசுவிலில் இரண்டு சிறுவர் உற்பட எட்டுத் தமிழர்களின்  கொடூர படுகொலைக்கு காரணமாக இருந்து குற்றம் நிறூபிக்கப்பட்டு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தார் இலங்கையின் மாண்பு மிகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச...

கொலை குற்றம் நிறூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பை வழங்கிய ஜனாதிபதி அந்த 8 பேரின் குடும்பத்திற்கு என்ன நஷ்ட ஈட்டை வழங்கினார்? 

ஒரு இராணுவ வீரன் குறித்தும் அவன் குடும்பம் குறித்தும் யோசித்த நீங்கள் அவரால் படுகொலை செய்யப்பட்ட எட்டுப்பேரின் உயிர்கள் குறித்தும் அந்த எட்டுப்பேரின் குடும்பங்கள் குறித்தும் கிஞ்சித்தும் சிந்தித்தீர்களா அதிமேன்மைமிகு ஜனாதிபதி அவர்களே? 
நீங்கள் அந்த எட்டுத்தமிழர்களையும் நீதியின்றி மீண்டும் மண்ணில் புதைத்துள்ளீர்கள். 

விடுதலை செய்வதற்கு முன்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு ஆறுதலையேனும் தெரிவித்தீர்களா? இந்த நாட்டின் மீயுயர் சபையான உயர் நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை உறுதி செய்த குற்றத்தை உங்களுக்கு இருக்கும் விசேட அதிகாரத்தை கொண்டு கேள்விக்கு உற்படுத்தியுள்ளீர்கள். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைத்தான் மறுத்தீர்கள் நிவாரணமேனும் வழங்குவீர்களா? இந்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளும் அபிவிருத்தி குழு தலைமைப்பதவிகளும் பெற்று சுகபோகமாக வாழும் அடுத்த தேர்தலில் போட்டியிட முண்டியடிக்கும் மகா உத்தமர்களே உங்கள் அரசாங்கம் செய்த இந்த செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்?

<சுப்ரமணிய பிரபாவின் முக நூல் பதிவு>
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கொலையானவர்களுக்கு கிடைத்த நீதி கொலையாளிக்கு விடுதலை... இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் !

Previous
« Prev Post