Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

மாணவனுக்கு சத்திர சிகிச்சை! கடுமையாக தாக்கிய ஆசிரியை தலைமறைவு!! பொலிஸார் பாராமுகம்!!!

  admin       வியாழன், 26 மார்ச், 2020


ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.மாணவனைத்  தாக்கிய ஆசிரியை தொடர்ந்து தலைமறைவான நிலையில் உள்ளார்.

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி  கலபொட தமிழ் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவன் ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்டு பாதிப்படைந்த நிலையில் அந்த மாணவன் கடந்த 12 ஆம் திகதி முதல் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில்லையில் சிகிச்சை 
பெற்று  வந்த மாணவனுக்கு 25 திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கலபொட தோட்டத்தில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.நாளாந்த உணவுக்கும் போக்குவரத்துக்கும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமது மகனுக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து இந்த பெற்றோர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

ஆகவே இந்த மாணவனுக்கு உதவி செய்ய முன் வருகின்றவர்கள் மாணவனின் தந்தையான மோகனதாஸ் ( 0777212419) தொடர்பு கொள்ள முடியும்.

குறிப்பிட்ட ஆசிரியருக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்த போதும் இதுவரை குறிப்பிட்ட ஆசிரியைக்கெதிராக நாவலப்பிட்டி பொலிசாரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவனின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

ஆசிரியை தாக்கியதன் காரணமாக குறிப்பிட்ட மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்த நிலையில் அந்த மாணவன் கடந்த 12ஆம் திகதி முதல் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கம்பளை பொலிஸ் பிரிவு அத்தியட்சகர் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் கம்பளை கல்விப் பணிமனை அதிகாரிகள் உட்பட பலருக்கு அறிவித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை . 

எனினும் குறிப்பிட்ட ஆசிரியை தலைமறைவாகி நிலையில் உள்ளதாகவும் அவரை கைது செய்ய முடியாதுள்ளதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்ட மாணவனின் பெற்றோரிடம் அறிவித்துள்ளனர். 

www.kuruvi.lk
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மாணவனுக்கு சத்திர சிகிச்சை! கடுமையாக தாக்கிய ஆசிரியை தலைமறைவு!! பொலிஸார் பாராமுகம்!!!

Previous
« Prev Post