Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

வாகனங்களிற்கான லீசிங் அறவீடு 6 மாதங்கள் இடைநிறுத்தம்… கடன் அறவீடு, மின் கட்டணத்தில் சலுகைகள்: அமைச்சரவை அங்கீகாரம்!

  admin       வியாழன், 26 மார்ச், 2020


கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளது.

நேற்று (25) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.

இதன்படி பின்வரும் நிவாரணங்கள் வழங்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

முச்சக்கரவண்டி, பாடசாலை வேன், லொறி, உணவு பொருட்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான வாகனங்கள், பஸ், வேன் போன்ற வாகனங்கள் போன்றவை குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கான லீசிங் தவணைக் கட்டணம் மற்றும் வட்டி ஆகியன செலுத்தப்படுவது 6 மாத காலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் தனியார் துறை சபை அல்லாத ஊழியர்களதும் சம்பளத்தில் கடன் தவணைப் பணத்தை அறவிடுவது மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் பத்து இலட்சத்திற்கும் குறைந்த தனிப்பட்ட கடனைப் பெற்றுக்கொண்ட நபர்களிடமிருந்து கடனை அறவிடுவது 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணம் மதிப்பீட்டு வரி, வங்கி காசோலைக்கான செல்லுபடியாக காலம் மே மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாதாந்த கடன் அட்டை 50 ஆயிரம் ரூபா வரையிலான பரிவர்த்தனைகளுக்கான கடன் வட்டி வீதம் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஆகக் கூடிய வரி அறவீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதார, பொலிஸ் , சிவில் பாதுகாப்பு உறுப்பினர் அடங்கலாக அரச ஊழியர்களுக்கான அக்ராஹார காப்புறுதி பயன் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுகிறது..

சமுர்த்தி மற்றும் வறுமை குடும்பங்களுக்கு உணவுப் பொருளுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் பிடிக்கப்படும் மீன்களை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை செலுத்தல், மின் கட்டணம் மற்றும் மதிப்பீட்ட வரியை செலுத்துவதற்காக தொழிற்பாட்டு மூலதனம் தேவையின் அடிப்படையில் 4 சதவீத கடனைப் பெற்றுக் கொள்வதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் வங்கி மூலம் அறவிடப்படும் எஞ்சிய வட்டி அரசாங்கத்தினால் அந்த வங்கிக்கு செலுத்தப்படும்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வாகனங்களிற்கான லீசிங் அறவீடு 6 மாதங்கள் இடைநிறுத்தம்… கடன் அறவீடு, மின் கட்டணத்தில் சலுகைகள்: அமைச்சரவை அங்கீகாரம்!

Previous
« Prev Post