Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 649 ஆக உயர்வு- 13 பேர் உயிரிழப்பு

  admin       வியாழன், 26 மார்ச், 2020


இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர் இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 நபர் உயிரிழந்துள்ளார். அவர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்றும் தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் வரை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை, ஆரம்ப கட்டத்தில் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளி விவரம் முறையில் இந்த பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள்.

அதில், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்று கூறியிருக்கிறார்கள். 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் நோய் தாக்கி உள்ளது.

இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தாக்கியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த கணக்கீட்டை உருவாக்கி உள்ளனர்.

இதன்படி நாடு முழுவதும் 12 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை நோய் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 60 ஆயிரம் பேர் வரை நோய் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரி செல்லும் நிலை ஏற்படலாம். மே மாதம் இந்த நோய் தாக்குதல் உச்சத்தில் இருக்கும். நிலைமை மோசமானால் 1 லட்சம் பேர் வரை அப்போது பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்துக் கொண்டால் நோய் தாக்குதல் 75 சதவீதம் வரை குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

எனவே மக்கள் வெளியே நடமாடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தொடர்பு துண்டித்தாலே நோய் பரவுதல் பெரும்பாலும் நின்றுவிடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நோய் தாக்கம் தொடர்பாக விரிவான அறிக்கையை அந்த அமைப்பிடம் இருந்து கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

இதுசம்பந்தமாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை துண்டிப்பது ஒட்டுமொத்த முடக்கத்தை விட நல்ல பலனை தரும் என்று கூறியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 649 ஆக உயர்வு- 13 பேர் உயிரிழப்பு

Previous
« Prev Post