Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 25 மார்ச், 2020

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தில் 255 பேர் மருத்துவ பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்...!

  admin       புதன், 25 மார்ச், 2020
நாட்டில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தில் 255 பேர் 21 மருத்துவமனைகளில் மருத்துவ பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் நேற்றைய தினம் புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று வரையில் இலங்கையில் மொத்தமாக 102 பேர் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் நேற்றைய தினம் ஒருவர் பூரணகுணமடைந்து ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே இலங்கையில் முதன்முறையாக இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியும் குணமடைந்திருந்தார்.

அதேநேரம் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இந்த நோயில் இருந்து குணமடைந்து நாடு திரும்பிய நிலையில் தற்போது வரையில் 99 பேர் கொரோனா நோயுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாட்டத்தில் 14 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 9 பேரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தில் 255 பேர் மருத்துவ பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்...!

Previous
« Prev Post