Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

மீண்டுமொரு துயரம்: கொல்லப்பட்ட மகனிற்காக போராடிய தாய் நீதி கிட்டாமலே காலமானார்!

  admin       வெள்ளி, 14 பிப்ரவரி, 2020
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜித்தர் என்ற மாணவனின் தாயார் காயாமாகியுள்ளார். தமது மகனின் படுகொலைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நீதி கோரி தொடர் சட்ட, இராஜதந்திர போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த நீதி கிட்டாமலேயே அவர் காலமாகியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மீது பெரும் மனித உரிமை மீறல் அழுத்தத்தை ஏற்படுத்திய திருகோணமலை மாணவர் படுகொலை 2006 ஜனவரி 2ம் திகதி மாலை இடம்பெற்றது. உயர்தர பரீட்சைக்கு பின்னர் பல்கலைகழகம் உள்ளிட்ட வாய்ப்புக்களை எதிர்நோக்கியிருந்த மாணவர்கள் திருகோணமலை கடற்கரையில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சுற்று வட்டத்தின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் கொல்லப்பட்ட ரஜித்தர் என்ற மாணவனின் தந்தையான வைத்தியர் மனோகரன், மகனின் படுகொலைக்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் அவர் நீதி கோரியிருந்தார். இந்த படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், உள்நாட்டில் வழக்கம் போல அது கண்டுகொள்ளப்படவில்லை.
இந்தநிலையில், ரஜீகரின் தாயார் காலமாகியுள்ளார்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்-
பதின்நான்கு வருடங்களிற்கு முன் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலையில் மரணித்த மாணவன் மனோகரன் ரஜித்தர் அவர்களின் தாயார் திருமதி மனோகரனின் அகாலச்செய்தி குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.
தம் சொந்தங்களிற்கு நடந்த அநீதிகளிற்கு நீண்டகால போராட்டங்களின் பின்னும் நீதியை காணாமல் இயற்கை எய்திய எம்மக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வது மிகுந்த மனவேதனையை தருகின்றது.
தனது மகனின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படுவதனை கண்டுகொள்ளாமல் திருமதி மனோகரன் அவர்கள் மரணித்தமை ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இழப்பினால் துயருற்றுள்ள வைத்தியர் மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றுள்ளது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மீண்டுமொரு துயரம்: கொல்லப்பட்ட மகனிற்காக போராடிய தாய் நீதி கிட்டாமலே காலமானார்!

Previous
« Prev Post