Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 13 பிப்ரவரி, 2020

இரவுவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்! மூவர் ஆபத்தான நிலையில்

  admin       வியாழன், 13 பிப்ரவரி, 2020
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பண்டாரவளை – மக்குலெல்ல பிரதான வீதியில் கொலதென்ன பகுதியால் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பண்டாரவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இரவுவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்! மூவர் ஆபத்தான நிலையில்

Previous
« Prev Post