Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

நள்ளிரவில் அதிரடி அறிவிப்பு: சாய்ந்தமருது நகரசபையாக தரமுயர்வு; அடுத்தது கல்முனை?

  admin       வெள்ளி, 14 பிப்ரவரி, 2020


தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கிழக்கில் கல்முனை தொகுதியிலுள்ள சாய்ந்தமருது மக்களுக்கான தனியான புதிய நகரசபையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னர் சாய்ந்தமருதின் புதிய நகர சபை எதிர்வரும் 2022 மார்ச் 20 முதல் உத்தியோகபூர்வமாக இயங்கும்.

இந்த நகரசபையை பெறுவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை சாய்ந்தமருது மக்கள் முன்னெடுத்து வந்தனர்.

கடந்த ரணில் அரசில் இது தொடர்பாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும், அது எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய கிழக்கின் கல்முனை தொகுதி சாய்ந்தமருது மக்களுக்களின் நகரசபை கோரிக்கை நிறைவேறாமலிருப்பதால் விரக்தியடைந்த அந்த மக்கள், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகமும் ஒன்றிணைந்து மாற்று முடிவுகளை எடுத்து பொதுஜன பெரமுனவடன் ஒப்பந்தம் செய்தனர்.

குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மூன்று மாத காலத்திற்குள் தற்போது சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை நகரசபை தரமுயர்த்தப்படும் விவகாரத்தில், எல்லை மீள் நிர்ணயம் செய்து கூட்டு நடவடிக்கையான சாய்ந்தமருதையும் தரமுயர்த்தும் திட்டம் குறித்து ரணில் அரசு ஆலோசித்திருந்தபோதும், அந்த அரசிற்கே உரிய விதத்தில் அந்த விடயமும் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.சாய்ந்தமருது நகரசபையாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து, கல்முனை தமிழ் பிரதேசசெயலகமும் தரமுயர்த்தப்படலாமென்ற எதிர்பார்ப்பு அந்த பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது




logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நள்ளிரவில் அதிரடி அறிவிப்பு: சாய்ந்தமருது நகரசபையாக தரமுயர்வு; அடுத்தது கல்முனை?

Previous
« Prev Post