Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 13 பிப்ரவரி, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக உதயமாகிறது வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்!

  admin       வியாழன், 13 பிப்ரவரி, 2020
தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசியலிலும், ஆயுத ரீதியாகவும் இளையோர் சமூகமே முன்னின்று ஆரம்பித்து செயற்பட்டுள்ளமை வரலாறு எமக்கு கற்பிக்கும் பாடம் என வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் M.A. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெறுமை அடைந்துள்ள தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை இளையோர் பங்குபற்றல் ஊடாக முன்னெடுக்க உதயமாகிறது வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்.
சமூக மாற்றத்தை விரும்பி எழுச்சி கொண்ட இளையோர் அனைவரும் சுயாதீன பயணத்தில் இணைந்து பணியாற்றவும், ஒரு புரட்சிகர மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த இளையோர் அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
தமிழ் மக்கள் தமது படைத்துறை ஆற்றலை இழந்த 2009 இன் பின்பான காலப்பகுதியிலிருந்து 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ள வரையான இன்றைய காலப்பகுதி மட்டும் மக்களின் சமூக,பொருளாதார, அரசியல் துறை சார்ந்த மேம்பாடு வெறுமையடைந்துள்ள நிலையில், தமிழ் மக்களிற்கு தேவையான அபிவிருத்தி மற்றும் அரசியற் பணிகளை கிராம மற்றும் மாவட்ட மட்டங்களிலிருந்து முன்னெடுக்க, இளையோர் சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மாற்றம் குறித்த நோக்கோடு தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்கின்ற தரப்பினர் சுயலாப மற்றும் குழுவாத போக்குகளிற்குள் கட்டுண்டு ஒரே கொள்கையினை வலியுறுத்தி முரண்பாடுகளை, எதிர் விமர்சனங்களை முன்வைத்து பல்வேறு அமைப்புக்களாகவும், கட்சிகளாகவும் செயற்பட்டு வருகின்றமை தற்போதைய அரசியல் நிலவரமாகும்.
இத்தகைய உள்ளக முரண்பாட்டுடன் சவால்கள் மிக்க சூழ்நிலை ஒருபுறமிருக்க, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் இளையோர் சமூகத்தை உள்வாங்குவதும், அவர்களை சுயாதீனமாக இயங்க விடுவதும் தற்போது மிகப் பெரிய குறையாக உள்ளமையினை அடையாளம் கண்டதன் வெளிப்பாடே காலத்தின் தேவையாக கருதி வன்னி தமிழ் மக்கள் ஒன்றியமாக பொதுவான வேலைத்திட்டத்தினை இளையோர் சமூகத்தை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சுயாதீன பயணத்தினை அறிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசியலிலும், ஆயுத ரீதியாகவும் இளையோர் சமூகமே முன்னின்று ஆரம்பித்து செயற்பட்டுள்ளமை வரலாறு எமக்கு கற்பிக்கும் பாடம். ஆனால், அரசியல் பணிகளை ஆரம்பித்த அன்றைய இளையோர் சமூகம் தாங்கள் முதியவர்களாகியும் அரசியல் தலைமைத்துவத்தை அல்லது செயற்பாட்டு அரசியலுக்கான பங்குபற்றலை தற்போதைய இளம் சமூகத்திடம் கையளித்து எம்மை வழி நடாத்தாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
இந்நிலையில் இந்த புதிய அமைப்பு உதயமாகிறது. ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை இளையோர் சக்தியாக தனிப்பட்ட முறையில் கட்டி நிமிர்த்தாமல் முழுமையான வெற்றி சாத்தியமில்லை என்கிற அடிப்பப்படையில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
16.02.2020 அன்று வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியத்துக்கான எமது உத்தியோகபூர்வ தலைமை செயலகத்தை பிறதான வீதி, பாரதிபுரம், கிளிநொச்சி எனும் இடத்தில் மக்கள் பணிக்காக திறந்து வைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக உதயமாகிறது வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்!

Previous
« Prev Post