Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

சுமந்திரன் அணியில் இணைந்து களமிறங்குவாரா நா.வேதநாயகன்?

  admin       வெள்ளி, 14 பிப்ரவரி, 2020
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நா.வேதநாயகன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவர் ஓய்வுபெறும் கால எல்லைக்கு சில மாதங்கள் இருக்கின்ற நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தையடுத்து, பதவியிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.
நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றிய நா.வேதநாயகன், தான் எந்தக் கட்சி சார்பாகவும் செயற்படவில்லையென தெரிவித்திருந்தார்.
எனினும், பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், அவர் மாவட்ட அரச அதிபராக நீடிப்பதை அரச தரப்பு விரும்பவில்லையென அறிய முடிந்தது. அரச தரப்பு பிரமுகர்களுடன் பேசியபோது, அவர் தமிழ் அரசு கட்சி சார்பானவர் என்ற அப்பிராயம் இருந்ததை அறிய முடிந்தது.
இலங்கை அரசசேவை சுயாதீனமானது என குறிப்பிடப்பட்டபோதும், ஆங்காங்கே சில அரசியல் தொடர்புகளும், அபிலாசைகளும் எட்டிப்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். இப்படியான அரசியல் தொடர்பு எட்டிப்பார்க்கும் அதிகாரிகள், ஒரு அரசாங்க காலத்தில் ஓகோ என்று இருந்தாலும், மறு அரசாங்கம் வந்ததும் தூக்கியெறியப்படுவது வழக்கம். அதேநேரம் நேர்மையான அதிகாரிகளும், சில விவகாரங்களில் அரசாங்கங்களிற்கு பிடிக்காத அதிகாரிகளும் தூக்கியெறியப்படுவது வழக்கம்.
எனினும், நா.வேதநாயகன் தான் எந்த அரசியல் கட்சி சார்பாகவும் செயற்படவில்லையென தெரிவித்துள்ளார்.
எனினும், யாழிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு, அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுதாபி என்ற அப்பிராயம் இருப்பதை தமிழ்பக்கம் அறிந்தது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் அரசு கட்சிக்குள்ளும் அவர் தொடர்பான வேறுவிதமான அப்பிராயம் உள்ளது. அவர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு நெருக்கமாகவே செயற்பட்டார் என அவர்கள் கருதுவதை தமிழ்பக்கம் அறிந்தது.
தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயலாளர் தமிழ்பக்கத்துடன் உரையாடிய போது, எம்.பியொருவர் திட்டத்திற்காக கொழும்பில் கதைத்து பெற்ற நிதியில் எஞ்சிய பணத்தில் இன்னொரு திட்டத்தை நடைமுறைப்படுத்த வரைவு கொடுத்தபோதும், அதை செய்யாமல், மேற்படி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரின் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக கூறினார். இதுபோன்ற அப்பிராயங்களுடன் வேறு எம்.பிக்களும் இருப்பதாக தெரிவித்தார்.
உண்மையிலேயே அவர் அப்படி அரசியல் சார்புடன் இருந்தாரா அல்லது, அவசியமான திட்டங்களின் அடிப்படையில் திட்டங்களை தெரிவு செய்தாரா என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தின் அனைத்து அரசியல் மட்டத்திலும் அவரது அரசியல் சார்புநிலை குறித்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
அவர் அவசரமாக பதவிவிலகியது, அதில் அரசியல் பேசியது, அவர் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்துள்ளாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த மாணிக்கம் உதயகுமாரும், பதவிவிலக்கப்பட்டபோது, ஓய்வுபெற்றார். அப்போது, அளவிற்கதிகமான அரசியல் ஸ்டன்ட் எடுத்து, அடிமையாக இருக்காமல் கௌரவமாக ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அது ஒரு அரசியல் நோக்கத்தை கொண்ட “ஓவர் அக்டிங்“ என்பது தெரிந்தது.
காரணம், அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கவுள்ளார். யாழ் அரச அதிபரின் பிரிவுபசார நிகழ்விலும், மட்டக்களப்பு அரச அதிபர் அளவிற்கு ஓவர் அக்டிங் இல்லையென்றாலும், அரசியல் மட்டத்தில் உள்ள அப்பிராயத்திற்கு மாறாக சில தகவல்களை சொல்லி, அரசியல் விவகாரங்களை கொஞ்சம் அதிகமானவே பேசினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தரப்பிலும், அவரை நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும்படி கோரப்பட்டது. எனினும், எம்.ஏ.சுமந்திரன் அணியில் இணைந்து யாழ் அரச அதிபரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கலாம் என்று தோன்றுகிறது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சுமந்திரன் அணியில் இணைந்து களமிறங்குவாரா நா.வேதநாயகன்?

Previous
« Prev Post