Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

பனிச்சரிவால் மூடப்பட்ட வீடுகள்! இதுவரை 19 பேர் பலி

  admin       வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

ஆப்கானிஸ்தானின் டேஹுடி மாகாணத்திற்கு உள்பட்ட நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இதனால், அப்பகுதிகளில் இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் இந்த பனிச்சரிவில் மக்களும் சிக்கிக்கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கித்தவித்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதில் மிரமூர் பகுதியில் 16 பேரும், அச்டர்லேபகுதியில் 3 பேரும் என மொத்தம் 19 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த பனிச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்து உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பனிச்சரிவால் மூடப்பட்ட வீடுகள்! இதுவரை 19 பேர் பலி

Previous
« Prev Post