Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

நேற்றைய உயிரிழப்பு 139: மொத்த உயிரிழப்பு 1,500 ஐ கடந்தது!

  admin       வெள்ளி, 14 பிப்ரவரி, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமையன்று 1,500 ஐத் தாண்டியது. கொரோனா தொற்றின் மையமான ஹூபே மாகாணத்தில் நேற்று 139 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, இப்போது கோவிட் -19 என அழைக்கப்படும் இந்த தொற்று ஒரு பெரிய சவாலாக இருப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் தொற்றுநோயை முறையாக தடுப்பதாக தெரிவித்தவர், சில நாடுகளின் “அதிகப்படியான எதிர்விளைவை” கண்டித்தார்.
எங்கள் முயற்சிகள் மூலம் தொற்றுநோய் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் உள்ளது” என்று அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சுமார் 25 நாடுகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, பல நாடுகள் சீனாவுடனான வர்த்தக மற்றும் பயண தொடர்புகளை வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நிறுத்தி வைத்துள்ளன. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஹொங்கொங்,எபிலிப்பைன்ஸ், ஜப்பானில் இவை பதிவாகின.
கடந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நாட்டில் முதல் கொரோனா தொற்றுக்குள்ளானவரை கண்டறிந்ததாக அறிவித்தது. எகிப்து அதன் முதல் தொற்றாளரை வெள்ளிக்கிழமை அடையாளம் கண்டது. கொரோனா ஆபிரிக்க கண்டத்தில் பரவிய முதல் நாடாகவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரண்டாவது நாடாகவும் எகிப்து உள்ளது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நேற்றைய உயிரிழப்பு 139: மொத்த உயிரிழப்பு 1,500 ஐ கடந்தது!

Previous
« Prev Post