Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 13 பிப்ரவரி, 2020

கொழும்பில் தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல்! ரவீந்திர குணரத்ன உட்பட இருவருக்கு வழங்கப்பட்ட அதிரடித் தீர்ப்பு!

  admin       வியாழன், 13 பிப்ரவரி, 2020

கொழும்பு புறநகர்ப் பகுதியில், 2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐந்து தமிழ் மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று, சட்ட விரோ­த­மாக தடுத்து வைத்து, கப்பம் பெற்­றமை மற்றும் காணாமல் ஆக்­கி­யமை தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ரானகடற்­படை புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் சந்­தன பிரசாத் ஹெட்டி ஆராச்­சிக்கு சட்­டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்­தி­ருக்க உத­வி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி, பாது­காப்புப் படை­களின் முன்னாள் தலைமை அதிகாரி ரவீந்­திர விஜ­ய­கு­ண­ர­த்ன உள்­ளிட்ட இரு­வரை விடு­தலை செய்­ய முடியாது என கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று முன்­தினம் தீர்ப்­ப­ளித்­தது.

இந்த விவ­காரம் குறித்த வழக்கு விசா­ரணை நேற்று கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்­போது பிணையில் உள்ள சந்­தேக நபர்­க­ளான லக்­சிறி அம­ர­சிங்க எனும் தென்னந்­தோப்பு உரி­மை­யா­ளரும் அட்மிரால் ரவீந்திர விஜே­கு­ன­ரத்­னவும் முன்னிலையா­கி­யி­ருந்­தனர். லக்­சிறி அம­ர­சிங்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சம்பத் மெண்­டிசும், ரவீந்திர சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்­னவும் பிர­சன்­ன­மா­கினர்.

விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­தர முன்னிலையானார். இதன்­போதே , 5 தமிழ் மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தின் பிர­தி­வா­தி­யான கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் சந்­தன பிரசாத் ஹெட்டியாரச்சி, நீதி­மன்ற புறக்­க­ணிப்பில் ஈடு­பட்டு நாட்­டை­விட்டு தப்­பிச்­செல்­வ­தற்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் ரவீந்­திர விஜ­ய­கு­ண­ர­த்ன மற்றும் லக்­சிறி அம­ர­சிங்க ஆகியோரை விசாரணைகளிலிருந்து விடு­விக்க முடி­யாது என நீதவான் தீர்ப்­ப­ளித்தார்.

இந்த 2 சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நீரூ­பிப்­ப­தற்கு போது­மான சாட்­சி­யங்கள் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் காணப்­ப­டு­வ­தாக நீதி­மன்றம் கரு­து­வ­தா­கவும் அந்த தீர்ப்பில் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க சுட்­டிக்­காட்­டினார்.

அதற்­க­மைய, குற்­ற­வியல் சட்டக் கோவையின் 120/3 சரத்­திற்கு அமைய, சந்­தே­க­ ந­பர்­களை விடு­விக்­கு­மாறு கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி சந்­தேக நபர் இருவர் சார்­பிலும் முன்­வைக்­கப்பட்ட கோரிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும் நீதிவான் அறி­வித்தார்.

சந்­தே­க ­ந­பர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான உண்மைத் தன்மை குறித்து வழக்கு விசா­ர­ணையின் பின்­னரே தீர்­மா­னிக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதிவான் இவ்வழக்கில் மற்றுமொறு பிரதிவாதியாக சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியைப் பெயரிடுவது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின் போது தீர்மானிப்பதாக அறிவித்து வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கொழும்பில் தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல்! ரவீந்திர குணரத்ன உட்பட இருவருக்கு வழங்கப்பட்ட அதிரடித் தீர்ப்பு!

Previous
« Prev Post