Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 15 ஜனவரி, 2020

கரையொதுங்கிய சடலம் காணாமல் போன பல்கலைகழக மாணவனுடையது? (PHOTO)

  admin       புதன், 15 ஜனவரி, 2020


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் சடலமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவன் சி.மோகன்ராஜ் கடந்த 9 ஆம் திகதி காணாமல்போன நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் முதலாம் ஆண்டு கற்றுவரும் அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவனே காணாமல் போயிருந்தார்.

பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் விடுதிக்கு திரும்பாத நிலையில் மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டுள்ளமையினால் கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கரையொதுங்கிய சடலம் காணாமல் போன பல்கலைகழக மாணவனுடையது? (PHOTO)

Previous
« Prev Post