Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இலங்கையில் பெற்றோர் வாழும் புலம்பெயர் தமிழர்களிற்கு அவசர எச்சரிக்கை: யாழில் நேற்றும் மூதாட்டிகள் கைது!

  admin       ஞாயிறு, 5 ஜனவரி, 2020


விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டு குடியுரிமையுள்ளவர்களை நாடு முழுவதும் கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு குடியுரிமையுள்ள பல முதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

80 வயதிற்கு மேற்பட்ட இரண்டு மூதாட்டிகளை கோப்பாய் பொலிசார் நேற்று (5) கைது செய்தனர்.

வெளிநாட்டில் பிள்ளைகள் உள்ள தமிழ் பெற்றோரில் பலர் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்களவனவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்து தமது சொந்த இடங்களில் குடியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முறைப்படியான ஆவணங்களை கொண்டிருக்கிறார்கள். இரட்டைக் குடியுரிமை, தற்காலிக தங்குமிட அனுமதியை பெற்று குடியிருக்க வேண்டியது அவசியம்.

எனினும், வயோதிபர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள், அந்த நடைமுறையை பின்பற்றாமல், ஏற்கனவே தாம் இலங்கையில் பயன்படுத்திய அடையாள அட்டைகளை பாவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், விசா காலம் காலாவதியான பின்னரும் தங்கியிருந்தார்கள் என குறிப்பிட்டு, 80 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகள் இருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட இவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்.

விசா காலம் காலாவதியான பின்னரும் தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை நாடளாவியரீதியில் நடந்து வருவதாக, அவர்களின் உறவினர்களிடம் கோப்பாய் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

வெளிநாட்டு குடியுரிமையுடன் இலங்கையின் வாழும் முதியவர்கள், முறையான ஆவணங்களை பெற ஆவண செய்யுமாறு அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இலங்கையில் பெற்றோர் வாழும் புலம்பெயர் தமிழர்களிற்கு அவசர எச்சரிக்கை: யாழில் நேற்றும் மூதாட்டிகள் கைது!

Previous
« Prev Post