Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 3 ஜனவரி, 2020

செல்வாவை மேற்கோளிட்டு கோட்டாவிடம் நேற்று சம்பந்தன் கூறிய விடயம்!

  admin       வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையாற்றினார்.

ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் நேற்று ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையுடன் மீண்டும் கூடியது. ஜனாதிபதி உரையாற்றி முடிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தேனீர் விருந்தளித்தார்.

இதன்போது, ஆளும் எதிர்தரப்புக்கள் பரஸ்பரம் நட்புறவாக பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த தேனீர் விருந்தை தவிர்ப்பதில்லையென நேற்று முன்தினம் நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கலந்துரையாடலிலும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை எம்.ஏ.சுமந்திரன் அறிவுறுத்தியிருந்தார்.

நேற்றைய தேனீர் விருந்தின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஜனாதிபதியுடன் அளவளாவியிருந்தனர். பெரும்பாலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் கோட்டாபயவிற்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவரிடமும், விரைவில் நாம் சந்தித்து பேசுவோம் என கோட்டாபய தெரிவித்தார்.

இரா.சம்பந்தனும் சிறிது நேரம் கோட்டாவிடம் பேசினார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“எங்கள் பெரியவர்- எஸ்.ஜே.வி.செல்வநாயகம் எப்பொழுதும் சொல்வார், சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஒரு தலைவராலேயே இனப்பிரச்சனையை தீர்க்க முடியுமென. சில வாரங்களின் முன்னர் நானும் அதை யாழ்ப்பாணத்தில் சுட்டிக்காட்டி பேசினேன். சிங்கள மக்களின் பெரும்பான்மையினரால் நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இது அருமையான வாய்ப்பு. இனப்பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டும்“ என இதன்போது இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஒரு புன்முறுவலுடன் நாங்கள் விரைவில் சந்தித்து பேசுவோம் என கோட்டாபய பதிலளித்துள்ளார்.

இதேவேளை, நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை எதிர்ப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரும், நாம் விரைவில் சந்தித்து பேசுவோம் என கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு அழைப்பு விடுத்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! செல்வாவை மேற்கோளிட்டு கோட்டாவிடம் நேற்று சம்பந்தன் கூறிய விடயம்!

Previous
« Prev Post