Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 14 ஜனவரி, 2020

சுமந்திரன் தலைவராக வருவது தமிழ் மக்களுக்கு சாபக்கேடாக அமையும்; இப்போதே சுட்டிக்காட்டுகிறார் சுரேஷ்!

  admin       செவ்வாய், 14 ஜனவரி, 2020


மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இன்று இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டுமென்று சுமந்திரன் கோரிக்கை விடுக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு நாங்கள் காரணமல்ல. திறமையற்ற தலைமையை இதற்கு காரணம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கொழும்பில் படித்துக்கொண்டிருந்த சுமந்திரனுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கின்றது? இவருக்குத் தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று தெரியுமா?  என கேள்வியெழுப்பியுள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இன்று தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ்மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப அனுபவித்து வந்த உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஐக்கிய தேசியக் தங்களைவிட கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே திரு சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது. இவர்கள் தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்டு வருகின்றது.

தேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப்பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது.

மாவை சேனாதிராஜா ஒரு கருத்தினைக் கூறி வருகின்றார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பது அது எனது சொந்த பிரச்சனை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார்.

தமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இதுவே அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது. மாறாக கடந்த கால அரசாங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை.

மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டுமென்று சுமந்திரன் கோரிக்கை விடுக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு நாங்கள் காரணமல்ல. திறமையற்ற தலைமையை இதற்கு காரணம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கொழும்பில் படித்துக்கொண்டிருந்த சுமந்திரனுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கின்றது? இவருக்குத் தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று தெரியுமா?

கடந்தகாலத்தில் கம்பெரலிய திட்டத்தின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் நடைபெற்ற படாத சில அவர் திட்டங்களை மேற்கொள்வதற்குப் நிதிப் பிரச்சனை காரணமாக ஓடுப்பட்டுத் திரிகின்றனர். ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி உள்ளது. கம்பெரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசாங்கத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இதன்மூலம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பெரலிய திட்டத்தினூடாக சில திட்டங்களை மேற்கொண்டு பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு அவர்கள் இவ்வாறான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சுமந்திரன் தலைவராக வருவது தமிழ் மக்களுக்கு சாபக்கேடாக அமையும்; இப்போதே சுட்டிக்காட்டுகிறார் சுரேஷ்!

Previous
« Prev Post