Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 4 ஜனவரி, 2020

அப்பாவை கொன்றவர்களை யார் பழிவாங்குவது?: ஈரான் ஜனாதிபதியிடம் சுலைமானின் மகள் கேள்வி!

  admin       சனி, 4 ஜனவரி, 2020


என் தந்தையின் கொலைக்கு யார் பழிவாங்குவார்கள் என, ஈரான் ஜனாதிபதியிடம், கொல்லப்பட்ட ஈரானிய  இராணுவத்தின் மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானின் மகள் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஈராக் தலைநகரில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் காசிம் சுலைமான் நேற்று காலை உயிரிழந்திருந்தார்.

இன்று சனிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள காசிம் சுலைமானின் வீட்டிற்கு, ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி அனுதாபம் தெரிவிக்க சென்றிருந்தார். இதன்போது, சுலைமானின் மகள், “என் தந்தையின் மரணத்திற்கு யார் பழிவாங்குவார்கள்?” என்று ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.

“எல்லோரும் பழிவாங்குவார்கள்” என்று ரூஹானி அவருக்கு பதிலளித்தார்.

சுலைமானின் கொலையின் மூலமை் அமெரிக்கா ஒரு “மிகப் பெரிய தவறு” செய்ததாகவும், அமெரிக்கர்கள் “இந்த குற்றச் செயலின் விளைவுகளை இன்று மட்டுமல்ல, வரும் ஆண்டுகளிலும் எதிர்கொள்ள நேரிடும்” என்றும் ரூஹானி கூறினார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அப்பாவை கொன்றவர்களை யார் பழிவாங்குவது?: ஈரான் ஜனாதிபதியிடம் சுலைமானின் மகள் கேள்வி!

Previous
« Prev Post