Breaking News

திருமணத்திற்கு வற்புறுத்தினாரா விக்னேஷ்? காதல் பிரச்சினைக்கு நயன்தாரா வைத்த முற்றுப்புள்ளி!



இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, காதலர் விக்னேஷை பிரிந்துவிட்டார் என்ற பரவிய தகவலுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை சேர்ந்து கொண்டாடிய இந்த ஜோடி, புது வருடத்திற்கு பின்பு இருவரும் இணைந்து எங்கும் செல்லவில்லை என்பதால், இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தற்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

புத்தாண்டு, விருது விழா என இந்த நிகழ்வில் எல்லாம் நயன்தாரா தனியாக வந்ததே இவ்வாறான பேச்சிற்கு காரணமாகியுள்ளன. எந்த தருணத்தில் இருவரும் இணைந்து செல்வதும், புகைப்படம் எடுத்து வெளியிடுவதும் என இருந்த ஜோடிகள் எதற்காக இவ்வாறு தனியாக வர வேண்டும்? என்பது தான் ரசிகர்களிடம் தோன்றிய முதல் கேள்வியாக இருந்தது.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவை வற்புறுத்தியதால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு இருவரும் இது பொய்யான தகவல் என்று கூறியுள்ளனர்.

புத்தாண்டில் நயன்தாராவை விக்னேஷ் தான் புகைப்படம் எடுத்தார் என்றும் பட வேலைகளில் சற்று பிஸியாக இருப்பதால் விருதுவிழாவிற்கு வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.